››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை – பங்களாதேஷ் ஜனாதிபதிகள் சந்திப்பு…

இலங்கை – பங்களாதேஷ் ஜனாதிபதிகள் சந்திப்பு…

[2017/07/15]

பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் டாக்கா நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பங்களாதேஷ் ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை பங்களாதேஷ் ஜனாதிபதி அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

ஜனாதிபதிகளுக்கிடையிலான சினேகபூர்வ உரையாடல்கள் நிறைவடைந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.

தானும் கிராமத்திலிருந்து வந்த ஜனாதிபதி என்பதோடு, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் கிராமத்திலிருந்து வந்த ஜனாதிபதி என்றவகையில் இலங்கை மக்களுக்கு ஆற்றிவரும் நேர்மையான பணிகளை தான் மிகவும் பாராட்டுவதாக பங்களாதேஷ் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஜனநாயக குறிக்கோளுடன் பயணிக்கும் இரு நாடுகள் என்றவகையில் இருநாடுகளினதும் தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல வாய்ப்புள்ளதென குறிப்பிட்ட பங்களாதேஷ் ஜனாதிபதி அவர்கள் மேலும் நீண்ட காலம் பேணப்படும்வகையில் இரு நாடுகளினதும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதன்பொருட்டு தொடர்ச்சியாக சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷிற்கு வருகைதந்த சந்தர்ப்பத்திலிருந்து அந்நாட்டு அரசாங்கம், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவரும் வழங்கிய சினேகபூர்வமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு தனது நன்றியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அரசமுறை விஜயத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலாச்சார நிகழ்வும் இன்று இரவு பங்களாதேஷ் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுவதுடன், அதன்பின்னர் பங்களாதேஷ் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படும் விசேட இராப்போசன விருந்திலும் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்