››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கண்டியிலுள்ள புனித தளத்திற்கு பாதுகாப்புச்செயலாளர் விஜயம்

கண்டியிலுள்ள புனித தளத்திற்கு பாதுகாப்புச்செயலாளர் விஜயம்

[2017/07/16]

பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தனது கடமைகளை போருபெற்றதன் பின்னர் கண்டியிலுள்ள புனித தளமான தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் முதற்தடவையாக இன்று (ஜூலை, 15) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சாலினி வைத்தியரத்ன அவர்களும் இணைந்துகொண்டார்.

இதன்பிரகாரம், பாதுகாப்பு செயலாளர் மெனிக்ஹின்னயிலுள்ள ஸ்ரீ வித்தியாசார முளா மகா விகாரைக்கு விஜஜம் செய்து பிரதம விகாராதிபதி வணக்கத்துக்குரிய நபன பேமசிறி தேரர் அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து மல்வது மகா விகாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்துக்குரிய திப்படுவாவ ஸ்ரீ சுமங்கள் தேரர் அவர்களிடமும் ஆசி பெற்றுக்கொண்டார். ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் மகா நாயக தேரர் அவர்கள் செயலாளர் அவர்களுக்கு சிறிய புத்தர் சிலை ஒன்றினை ஞாபகச்சின்னமாக வழங்கிவைத்தார்.

இதன்பின்னர் பாதுகாப்பு செயலார் வைத்தியரத்ன மற்றும் திருமதி வைத்தியரத்ன அவர்களும் புனித தலதா மாளிகைக்கு வருகைதந்து பிரதம விகாராதிபதியிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்று அஸ்கிரிய பிரதம விகாராதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட தம்மசித்த ஸ்ரீ பிரக்ஞ்சாந்த ஞானரத்ன அவர்களை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்