››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு

இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2017/07/17]

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்விற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கை இராணுவத்தினர் மற்றுமொரு இரத்தப் பரிசோதனை நிலையமொன்றினை கிரிபத்கொட போதனா வைத்தியசாலையில் அண்மையில் (ஜூலை, 14) நிறுவியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலையத்தின் ஊடக இரத்த மாதிரிகளை முன்பரிசோதனை செய்து டெங்கு நோயாளர்களை விரைவில் அறிந்து அதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில் இந்நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் இரண்டாவதாக நிறுவப்பட்ட இவாறான நிலையத்தினூடாக இராணுவ மருத்துவ படைப்பிரிவினர் வைத்தியசாலைக்கு சமூகம்தரும் டெங்கு நோயாளர்களுக்கான இரத்தப்பரிசோதனையினை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே இவ்வாறான பரிசோதனை நிலையம் நீர்கொலும்பு வைத்தியசாலையில் நிருவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை மேற்கு பாதுகாப்பு படை தலைமையத்தினால் மேல்மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரகின்றன அந்தவகையில் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டம் உட்பட கொழும்பின் ஹங்வெல்ல, ஹோமாகம, கடுவெல, பிலியந்தல, கோட்டை, கஹாதுடுவ, அத்தனங்கல, மிரிகம, தொம்பே, பியகம, களனி, ஹோரண, மதுகம, வட்டுவ, மற்றும் பண்டாரகம போன்ற பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 500 படையினர் இப்பணிகளில் ஈடுபட்டுவரகின்றனர்.
 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்