››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமக்களுக்கு சொந்தமான 189 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

பொதுமக்களுக்கு சொந்தமான 189 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

[2017/07/20]

முல்லைத்தீவு பாதுகாப்புப்படை தலைமையகத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 189 ஏக்கர் காணி, நேற்றைய தினம் (ஜுலை,19) இடம்பெற்ற வைபவத்தின் போது விடுவிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.

கேப்பாப்பிளவு பிரதேசத்தில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை விடுவித்ததன் காரணாமாக குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் பெரும்பாலானோர் தமது காணிகளிலே குடியிருக்க கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரிகேடியர் பொது பதவிநிலை பிரதானியினால் குறித்த காணிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதிஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், குறித்த இந் நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகாரங்களுக்கான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.

இதற்கு முன்பதாக இவ்வருட ஆரம்பத்தில் கேப்பாப்பிளவு மக்களது மனிதாபிமான பிரச்சினையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு சொந்தமான 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்