››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/07/21]

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "இசுமோ" மற்றும் "சசணமி " ஆகிய இரு கடற்படை கப்பல்கள் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்றையதினம் (ஜுலை, 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பல்களை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

"இசுமோ" கடற்படைக் கப்பல் ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான மிகவும் நீளமான கப்பல் என்பதுடன் சுமார் 970 கடற்படை வீரர்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லக்கூடிய கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜுலை, 23) இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகள், மனிதாபிமான உதவி நடவடிக்கைகள், அனர்த்த நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்பான செய்திகள் >>

ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருக

ஜப்பான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருக

“இந்தோனேசிய கொமொடோ பயிற்சி-2016” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்ப

இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்