››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் வினைத்திறனாக முன்னெடுப்பு

இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் வினைத்திறனாக முன்னெடுப்பு

[2017/07/22]

‘நாம் ஆரம்பிப்போம் - டெங்குவை ஒழிப்போம்’ தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 1190 படைவீரர்கள் குறித்த திட்டத்தில் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் கொழும்பு,கம்பஹா, களுத்துறை, குருணாகல், கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக் கிழமை (ஜுலை, 21) முதல் முன்னெடுக்கபடுகின்றது.

குறித்த இந் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புகையிரத நிலையங்கள், வைத்தியசாலைகள், பஸ்தரிப்பிடம், பாடசாலை வளாகங்கள், வியாபார நிலையங்கள்,விகாரைகள் மற்றும் பொது நிலையங்கள் என்பன சுத்திகரிக்கப்பட்டன. அத்துடன்நாட்டில் நிலவும் அசாதாரண நிலைகளின் காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அரச பணிப்புரைகளுக்கமைய பாதுகாப்பு பதவி நிலை காரியாலய தொடர்பாடலுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்