››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வு மாநாடு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வு மாநாடு

[2017/07/24]

ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 8வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு ஆகஸ்ட் 3, 4 ம் திகதிகளில் ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சினது தகவல் மையத்தில் இன்று (ஜூலை, 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வருடத்திற்கான 10வது சர்வதேச ஆய்வு மாநாடு “உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இவ்வருட ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பும் உத்திகளுக்குமான கற்கைகள், பொறியியல், சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் வெளி அறிவியல், கணனியியல், மருத்துவம், அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல், ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானம் என்பன உள்ளடங்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்போது 9 பிரிவுகளைக்கொண்ட ஆய்வுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களினால் சுமார் 365 ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாடு அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் தேசிய தொழில்நுட்ப நிலையம் என்பனவற்றின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இம்மாநாடு, மாநாட்டுக்கு முன்னதான செயலமர்வு, முழுமையான அமர்வு, சுவரொட்டி விளக்கக்காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அமர்வுகளாக இடம்பெறும். மேலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆய்வாளர்களினால் முன்னர் வெளியிடப்படாத அவர்களின் ஆய்வுச் சுருக்கங்கள், சற்று விரிவான விளக்கங்கள் மற்றும் முழுமையான ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றை சமர்பிப்பதை வரவேற்கிறது. ஆய்வாளர்களிடமிருந்து இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் இருமுறை பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறந்த வாய்மொழிமூல விளக்கங்கள் மற்றும் சுவரொட்டி காட்சிகள் விருதுகள் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்படும்.

பரந்த அளவுகளிலான துறைகளில், சர்வதேச அமைப்புக்களின் ஆய்வாளர்கள் மற்றும் தொழில்வல்லுனர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ளவும் மற்றும் புதிய ஆய்வுகளை பகிர்ந்துகொள்ளவும் இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மாநாட்டின் நோக்கமாக காணப்படுகிறது. இம்மாநாட்டின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கல்வி மற்றும் தொழில்களுக்கு மத்தியிலான ஒருங்கிணைப்பு மற்றும் வலையமைப்பினை உருவாக்கும் வகையிலும், இளம் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆக்கத்திரன்களை ஊக்குவிக்கும் வகையிலும் இம்மாநாடு இடம்பெற்று வருகிறது. இராணுவம் மற்றும் சிவிலியன் பங்குகொண்டு அவர்களின் ஆய்வுகள் தொடர்பான கருத்துக்கள், பிரச்சினைகளை முன்வைக்கவும் சிறந்த ஒரேயொரு தளமாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்மாநாட்டின் சிறப்பு பேச்சாளர்களான பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க மற்றும் வைத்தியர் பந்துல விஜே அவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களின் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரதி உபவேந்தர் பிரிக்கேடியர் ஐ பி ரணசிங்க, பிரதி உபவேந்தர் (கல்வித்துறை) பேராசிரியர் எம் எச் ஜே ஆரியரத்ன, மாநாட்டின் தலவைர் வைத்தியர் கே எம் ஜி பிரசன்ன பிரேமதாச ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்