››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்கில் அங்கவீனர்களுக்கு 100 சக்கர நாற்காலிகள் விநியோகிப்பு

கிழக்கில் அங்கவீனர்களுக்கு 100 சக்கர நாற்காலிகள் விநியோகிப்பு

[2017/07/24]

இராணுவத்தினரின் யாழ் மாணவர்களுக்கு கணனிகள் அன்பளிப்பு

அண்மையில் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைக்கப்புடன் கிழக்குப்பகுதியில் தேவையுடைய பயனாளிகளுக்கு 100 சக்கர நாற்காலிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் மட்டக்கிளப்பு மாவட்ட செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பல்சமூகத்தை சேர்ந்தவர்கள் குறித்த சக்கர நாற்காலிகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் அனேகமானவர்கள் அங்கவீனர்களாக பிறந்தவர்களாவர்.

சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 100 சக்கர நாற்காலிகளுக்கான நிதியுதவி இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த திரு பிரியன் புஸ்பகுமார அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இச்சக்கர நாற்காலிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையாக 23வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, அண்மையில் (ஜூலை, 20) யாழ் பாதுகாப்பு படை தலைமையாகத்திற்குட்பட்ட படையினரினால் மாணவர்களின் கல்வித்தரத்தினை மேலும் உயர்த்தும் வகையில் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு மூன்று கணனிகளை அன்பளிப்பு செய்துள்ளனர். படையினரிடம் பாடசாலை அங்கத்தவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை கருத்திற்கொண்டு இதனை அன்பளிப்பு செய்துள்ளதாகவும்,. யாழ் தீபகற்பத்தில் மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையில் இதற்குமுன்னர் பல கணனிகளை அன்பளிப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்