››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவுவதற்கான இரண்டாவது கட்டம் ஆரம்பம்

நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவுவதற்கான இரண்டாவது கட்டம் ஆரம்பம்

[2017/07/25]

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனடிப்படையில் சிறுநீரக நோய் அதிகமாக காணப்படும் பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் பானம உகந்தை புனித பூமி, வவுனியா குருதுபிடிய, இலங்கை கடற்படை கப்பல் பட்டறை 02ம் பிரிவு, இலங்கை கடற்படை கப்பல் அக்போ மற்றும் கோடைம்பர ஆகிய இடங்களில் மேலும் 06 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. குறித்த நிலையங்கள் அண்மையில் (ஜூலை 22) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்காக இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்திற்கு சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் கடற்படையின் சமூக பொறுப்பு நிதி என்பன நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மேலும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உட்பட பலர் இத்திட்டத்திற்கு தமது பங்களிப்பினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டத்தினூடாக இதுவரை நாடு பூராகவும் 236 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 112,416 குடும்பங்கள் மற்றும் 80,185 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்