››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தொம்பகொட தொழிற்சாலையில் இராணுவத்தினருக்குரிய பொருட்கள் தயாரிப்பு

தொம்பகொட தொழிற்சாலையில் இராணுவத்தினருக்குரிய பொருட்கள் தயாரிப்பு

[2017/07/26]

இலங்கை இராணுவத்தினர் ஹொரண தொம்பகொடயிலுள்ள இராணுவ பொருட்களுக்கான தொழிற்சாலையில் காலணிகள், பெரட்ஸ், கைப்பைகள், இயந்திரத்தறி மற்றும் கைத்தறி போன்ற உற்பத்திபொருட்கள் தயாரித்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ தொழிற்சாலையில் குறித்த பொருட்களை பார்வையிடும் நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க அவர்கள் நேற்று (ஜூலை, 25 ) கலந்து சிறப்பித்தார்.

இதேவேளை, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொம்பகொட தொழிற்சாலை மற்றும் கொஸ்கம இராணுவ கைத்தொழில் பட்டறை ஆகியன வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இதன் மூலம் இராணுவத்தினருக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகின்ற இராணுவ வாகனங்களின் வன்பொருள், பர்ராக் உபகரணங்கள், இயந்திர உபகரணங்கள், மற்றும் பல்வேறு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதனூடாக இராணுவத்தினரின் நவீன தொழிநுட்ப அறிவினை பெறுவது,

திறமைகளை விருத்தி செய்வது , புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவது, போன்ற நோக்கங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் தரமான உற்பத்திகளை அணுகுவதன் ஊடாக ,படையினருக்கு இரண்டாம் தர கைத்திறன் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ள சந்தர்பங்கள் வழங்குகின்றன. மேலும் பிரதானமாக இத்திட்டத்தின் மூலம் அந்நியச்செலாவணியின் பரிமாற்றத்தை பாதுகாக்க முடியும்
மேலும் இத்தொழிற்சாலையின் செயற்பாடுகளுக்காக 8 இராணுவ அதிகாரிகள் மற்றும் 285 படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ ஒடனன்ஸ் படைகளின் கேர்ணல் கொமடான் மேஜர் ஜெனெரல் ரேணுகா உடவத்த உட்பட, இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்