››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில்

அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில்

[2017/07/26]

ஆசிய-பசிபிக் அமைதி காப்பு பயிற்சி நிலையத்தின் கொமடான்ட் மாநாடு மற்றும் ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடல் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் 03ம் திகதிவரை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற இருப்பதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிகழ்வு இலங்கை இராணுவ அமைதிகாக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம், பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளையின் கீழ் பூகோள சமாதான நடவடிக்கைகளுக்கான நிறுவனத்துடன் இணைந்து எட்டாவது தடவையாக நடைபெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வருடம் ‘அதிகரித்துவரும் வலுவான அமைதிகாக்கும் மனோநிலையின் சவால்கள்’ எனும் தொனிப்பொருளில் பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கொமடான்ட் மாநாடு ஆசியா பசிபிக் பிராந்தியத்தை பிரதிநிதித்துவ படுத்தும் அவுஸ்ரேலியா, பங்களாதேசம், புருமை, காம்போஜய, சீனா, பிரிஜிய, இந்தியா, இந்தோனிசியா, ஜப்பான், மலேசியா, மொங்கோலியா, நேபாளம் ,நியூசிலாந், பாகிஸ்தான், பெபுவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், கொரியா, தாய்லாந், வியட்னாம், இலங்கையான 21 நாடுகளின் 50 பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடை பெறவுள்ளது.

பூகோள சமாதான நடவடிக்கை தோற்றம், இலங்கை இராணுவ அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனம், பங்களாதேச சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவனம், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நிறுவனம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட இலங்கை ஆயுதப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆசிய பசிபிக் அமைதி நடவடிக்கைகள் பயிற்சி நிலையத்தின் 2017 ஆண்டிற்கான வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான தொனிப்பொருளினை நிர்ணயிக்கும் வகையிலான முன்னாயத்த அமர்வுகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் குகுலேகங்க இலங்கை சமாதான ஆதரவு நடவடிக்கைகள் நிலையத்தில் இடம்பெற்றது.

வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான தொனிப்பொருளினை நிர்ணயிக்கும் இரண்டு நாட்களைக் கொண்ட ஆரம்ப கட்ட அமர்வுகள் குகுலேகங்க இலங்கை இராணுவ பயிற்சி பணியகத்தினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆசிய- பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகளின் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்