››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் டெங்கு தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் டெங்கு தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

[2017/07/27]

“தற்போதைய டெங்குப் போக்கு: தொற்றுநோய் பரவுவதனை குறைப்பதற்கான கட்டமைப்பும் வழிவகைகளும்” எனும் தலைப்பில் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (ஜூலை, 26 ) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாட்டில் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக முப்படை அதிகாரிகளினால் விளக்கம்ளிக்கப்பட்டதை தொடர்ந்து அதுதொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின. இதன்போது பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் டெங்கு ஒழிப்பு தொடர்பாக விரிவுரை ஒன்றும் நிகழ்த்தினார்.

மேலும், நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவுவதனை மதிப்பீடு செய்யும் வகையில் அரச மற்றும் பொது சுகாதார அமைப்புக்களை ஒன்றிணைத்து செயற்படுவதுடன், விசேடமாக டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கு படையினரை எவ்வாறு ஈடுபாடுத்துவது என்பன தொடர்பாக கலந்துரையாடுவது இதன் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை, அண்மைக்காலங்களில் விசேடமாக வெள்ள அனர்த்தத்தின் பின்னர் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு கொடிய டெங்கு நோய் அதிகரித்துள்ளதை அவதானிக்கமுடிந்தது. இதன்பிரகாரம் இக்கொடியநோயின் பாதிப்பால் சுமார் 260க்கும் அதிகமானோர் பலியாகினர். இதன்காரணமாக இந்நோய் பரவுவதனை தடுப்பதற்கு அரசு தனது முழு முயற்சியையும் செய்துவருவதுடன், நாடுபூராகவும் சுத்திகரிப்பு வேலைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் நோயினை கட்டுப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையிலும் வைத்திய சாலைகளுக்கு மேலதிகமாக ஊழியர்கள், தேவையான மருந்துகள், மருத்துவ உபகரனங்கள், என்பனவற்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பாதுகாப்பின் மேலதிக செயலாளர் திரு ஆர் எம் எஸ் சரத் குமார, இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர, சுகாதார அதிகாரிகள், முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்