››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மன்னார் வைத்தியசாலைக்கு இராணுவ வீரர்களினால் இரத்ததானம்

மன்னார் வைத்தியசாலைக்கு இராணுவ வீரர்களினால் இரத்ததானம்

[2017/07/27]

மன்னார் மாவட்ட த்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் இராணுவ வீரர்கள் மன்னார் வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வில் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர். முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் இராணுவத்தின் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 542பிரிவின் கீழ் கடமை புரியும் இராணுவ வீரர்கள் இரத்த தான வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் முருகன் மாகாண வைத்தியசாலையின் பிரதான மருத்துவ அதிகாரியின் கோரிக்கைக்கு அமையவாக குறித்த இரத்ததான நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (ஜுலை, 23)ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்தின் 542 படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள மாந்தை,மன்னார் இராணுவ முகாமைச் சேர்ந்த 136 இராணுவ வீரர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.

மேலும், வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த மாதிரிகளின் தட்டுப்பாடு நிலவுகின்றபோது படையினர் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்துவருகின்றனர். இதேவேளை, இம்மாத ஆரம்பத்தில் முல்லைத்தீவில் இதுபோன்ற இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் சுமார் 350 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்