››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படைக்கென நிர்மானிக்கப்பட்ட உயர் ரக கடற்படைக்கப்பல் கொழும்பு வருகை

இலங்கை கடற்படைக்கென நிர்மானிக்கப்பட்ட நவீன கடற்படைக்கப்பல் கொழும்பு வருகை

[2017/07/29]

இலங்கை கடற்படைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல், நேற்று காலை (ஜூலை,28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த குறித்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த இக்கப்பலுக்கு 'எஸ்எல்என்எஸ் சயுறால' ஆக ஆணையதிகாரம் அளிக்கப்படவுள்ளதுடன் குறித்த இவ்வுத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய தலைமையில் கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இக் கப்பலில் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 100 கடற்படை சிப்பாய்கள் ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளனர். அத்துடன் குறித்த இக்கப்பலானது, இலங்கை கடற்படையின் முதலாவது புதிய நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் எனும் பெயரினையும் பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இணைந்து வரவேற்றனர். இதேவேளை, குறித்த தளத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கப்பலின் செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டு அம்சங்கள் தொடர்பாக ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

     

தொடர்பான செய்திகள் >>

மிகப்பெரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிப்பு

கோவா கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

பாதுகப்புச் செயலாளர் ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களை இராஜாங்க அமைச்சர் கண்காணிப்புசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்