››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு

மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு

[2017/07/30]

ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை, 28) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது. குறித்த இத்திட்டத்தில் 700க்கு அதிகமான இராணுவ சிப்பாய்களுடன் இணைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந் நிகழ்ச்சி திட்டத்தின் பிரதான நோக்கம், பாடசாலை சூழல், பொது இடங்கள்,டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குரிய இடங்கள் ஆகியவற்றை கண்டு பிடித்து அவற்றை சுத்தப்படுத்துவதன் மூலம் இல்லாமல் செய்தல் ஆகும்.

இதேவேளை, குறித்த தேசிய திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை கடற்படையினராலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கமைவாக வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த 40 பாடசாலைகளில் சுமார் 633 கடற்படை சிப்பாய்கள் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு தமது பங்களிப்பினை வழங்கியதாக கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு தமது பங்களிப்பினை வழங்கும் வகையில் விமானப்படை நிலையங்களில் இருந்து 715 விமானப்படை வீரர்களினால் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் தனது பங்களிப்பை செய்துள்ளது. இதன் பிரகாரம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் பொது சுகாதார அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து சுமார் 150 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் கந்தான மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களுக்கு டெங்கு நோய் பற்றிய ஆலோசனைகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

     
     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்