››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

[2017/08/05]

கிளிநொச்சி பிராந்தியத்தை சேர்ந்த 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அண்மையில் (ஆகஸ்ட், 02) இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இலங்கை இராணுவ கிளிநொச்சி தலைமையகம் அனைத்துவகையான ஏற்பாடுகளையும் செய்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிக்கான நிதியனுசரனை 'குண ஜய சத்துட பதனம' எனும் அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. குறித்த நிறுவனம் இதற்கு முன்னர் பல தடவைகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் கரியகரவன, திரு. குசில் குணசேகர உள்ளிட்ட 'குண ஜய சத்துட பதனம' எனும் அறக்கட்டளை நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்