››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சீன மருந்துவ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

[2017/08/06]

சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

'சமாதான பேழை' என அழைக்கப்படும் இக்கப்பல், உலகலாவிய ரீதியில் ஏற்படும் அசாதாரண நிலைகளின் போது விரைவான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். 178 மீற்றர் நீளதத்தினைக் கொண்ட இக் கப்பலின் அகலம் 24 மீற்றர் ஆகும். உலகின் பல நாடுகளைச் சுற்றி வலம் வந்துள்ள இக் கப்பலில் நவீன அறுவைச்சிகிச்சை கூடம் , தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு மருத்துவ சேவைகள், குடியிருப்பு சிகிச்சை அலகுகள், சீடீ ஸ்கான் இயந்திரங்கள், கணனி மயப்படுத்தப்பட்ட நவீன சிகிச்சைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.

இக்கப்பல், இலங்கையில் தரித்திக்கும் வேளையில் கப்பலின் சிப்பாய்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளனர். எதிர் வரும் புதன்கிழமை (ஆகஸ்ட், 09) தனது விஜயத்தினை பூர்த்திசெய்யவுள்ள இக்கப்பல் அத்தினமே நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்