››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வு மாநாடு “உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருளில்

“உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருளில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வு மாநாடு 

 [2017/08/05]

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட 10வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 3) ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இராணுவம் மற்றும் சிவில் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தி முப்படைத்தளபதிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கல்வியியலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டு நாட்களைக்கொண்ட (ஆகஸ்ட் 3, 4 ம் திகதிகள்) இவ்வருட மாநாட்டில் “உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட உள்ளது.

வருடாந்தம் இடம்பெறும் இம்மாநாட்டின் ஊடாக ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 2000க்கும் அதிகமான ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது ஆய்வாளர்களிடமிருந்து சுமார் 500க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்புக்களை பெறுகின்றது. இதன்மூலம் இவ்வருடம் 320 ஆய்வுக்கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு முன்வைக்கப்படுவதோடு ஏனைய சமர்ப்பிப்புகள் இவ்வருட மாநாட்டில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட மாநாட்டிற்கு ஏற்பாட்டாளர்களால் பிரிட்டனில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற இலங்கை கல்வியியலாளர்களான வானியல் நிபுணர், வானியலாளர், பேராசிரியர் சந்திர விக்கிரமசிங்க மற்றும் விஞ்ஞான உயிரியல் மருத்துவ பொறியியலாளர் துறையில் அறிவியல் முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய விஞ்ஞானி வைத்திய கலாநிதி பந்துல் விஜே ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
9 பிரிவுகளை உள்ளடக்கிய “உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'” எநனும் தொனிப்பொருளிலான இவ் ஆய்வு மாநாட்டில் தேசிய மற்றும் சர்வதேச கல்வியியலாளர்கள் தாம் பல்வேறு துறைகளில் பெற்றுக்கொண்ட அனுபவ அறிவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

இதன் பிரகாரம் ஒவ்வொரு துறைகள் சார்பாகவும் தனித்தனி அமர்வுகளில் கலந்துரையாடப்படும். இதற்கமைய பொறியியல்துறை சார்ந்த அமர்வுகளின் கீழ், உயிரியல் மருத்துவ பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், தொலைத்தொடர்பு பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல், சிவில் பொறியியல், வானூர்தி பொறியியல் மற்றும் கடல்சார் பொறியியல் போன்ற பிரிகள் தொடர்பாகவும், மருத்துவத்துறை சார்ந்த அமர்வுகளில், ஆரம்ப மருத்துவ சிகிச்சை, பிந்தைய மருத்துவ விஞ்ஞானம், உடற்கல்வி, ஆய்வுகூட அறிவியல், மருந்தகம், உடலியல் மருத்துவம் மற்றும் ஊடுகதிர் படமெடுப்பு என்பவை தொடர்பாகவும், சட்டம் தொடர்பாக கலந்துரையாடப்படும் அமர்வுகளின்போது சர்வதேச சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் இராணுவ சட்டம் தொடர்பாகவும், கணனி தொடர்பாக கலந்துரையாடப்படும் அமர்வுகளின்போது கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகவும், உயிரியல் இரசாயன அறிவியல், மூலக்கூறு உயிரியல் அறிவியல், இயற்பியல் மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகள் அடிப்படை மற்றும் பிரயோக விஞ்ஞானம் தொடர்பாகவும், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மொழிகள், அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் என்பன சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானம் போன்ற தலைப்புகளிலும் ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

மேலும், சூழல், கட்டிடக்கலை, இயற்கையை ரசித்தல், அளவீடு செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற தலைப்புகளிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

இவ்வருடாந்த மாநாடானது பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு தமது ஆய்வுகளை முன்வைக்க சந்தர்ப்பங்களை வழங்கும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் எட்மிரல் ஜகத் ரணசிங்க வழிகாட்டலின் கீழ் இணைச்செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழ விரிவுரையாளர்களான திரு.டபள்யூ.பீ.எல்.கே விஜேசிங்க மற்றும் திருமதி ஏ.எம்.டி.என் அதிகாரி ஆகியோரின் ஒத்துழைப்புடன் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி பிரசன்ன பிரேமதாச அவர்களின் தலைமையில் இடம்பெறுகிறது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்