யாழில் “கடற்படை கிண்ணம் – 2017”
கால்பந்தாட்டப் போட்டி நிகழ்வு
[2017/08/07]

இலங்கை கடற்படையினரின்
ஏற்பாட்டில் 14 வயதின்கீழ் ஏழு பேர் கொண்ட குழுவினருக்கான கால்பந்தாட்ட
போட்டி நிகழ்வு ஒன்று அண்மையில் (ஆகஸ்ட், 05) யாழ் மாவட்டத்தில்
இடம்பெற்றுள்ளது.
முதன்முறையாக யாழ்
குடாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட “கடற்படை கிண்ணம் – 2017” க்கான குறித்த
போட்டி நிகழ்வுகள் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றதாக கடற்படை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போட்டியில் யாழ்
மாவட்டத்தை மையப்படுத்தி ஆறு பாடசாலைகளும் மற்றும் தேசியரீதியில் ஆறு
பாடசாலைகளுமாக போட்டியிட்டு விளையாடியதில் யாழ் சென் பாட்ரிக் கல்லூரி
சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதோடு, யாழ் மத்திய கல்லூரி இரண்டாம்
இடத்தையும் பெற்றுகொண்டது. இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து
வெற்றியாளர்கள் மற்றும் அணிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது. இதேவேளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை பெண்கள்
அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் இரண்டு கோள்களால்
இலங்கை கடற்படை பெண்கள் அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில், யாழ் மாவட்ட
செயலாளர் திரு என் வேதநாயகன், வடமாகான ஆளுநரின் செயலாளர், இராணுவ மற்றும்
காவல்துறை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடற்படை தளபதி வைஸ் எட்மிரல்
ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் வடமாகான கடற்படை
கட்டளையகத்திற்கு உட்பட்ட யாழ் குடாநாட்டில் உள்ள பாடசாலை மானவர்களின்
விளையாட்டு திறனை விருத்தி செய்யும் வகையில் 2016 ஆன்டில் கால்பந்தாட்ட
பயிற்சி திட்டமொன்று (கடற்படை கிண்ணம்) ஆரம்பிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு
பயிற்சிகளை வழங்கும் வகையில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 07 கடற்படை
விளையாட்டு விரர்கள் இணைக்கப்பட்டனர்.
இதுவரைக்கும் 200 க்கும்
மேற்பட்ட மாணவர்கள் கால்பந்தாட்ட பயிற்சியில் பங்குபற்றியுள்ளதுடன்,
இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்துணவு மற்றும் பானங்களும்
வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் விளையாட்டுக்கு தேவையான காலணிகள், விளையாட்டு
உடைகள் மற்றும் அத்தியாவசிய விளையாட்டு பொருட்கள் என்பனவும்
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
|