சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில்
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள்
[2017/08/08]

அண்மையில் செக் குடியரசில்
நடைபெற்று முடிந்த சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ
துப்பாக்கிச் சூட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இவ்வருடம்
(2017 ஜூலை ) 18ம் திகதி முதல் 29ம் திகதி வரை செக் குடியரசின் வடக்கு
பொஹெமியா துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இவர்கள்
மேலும் இரு வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களையும்
வென்றுள்ளனர்.
சிறிய துளை திறந்த பார்வை,
சிறிய துளை திறந்த பார்வை நிழல், சிறிய துளை துப்பாக்கி திறந்த வெளி மொத்தம்,
சிறிய பார்வை அனைத்துப் பார்வை, சிறிய துளைத் துப்பாக்கி –குழு ஆகிய
துப்பாக்கி சூட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு இராணுவத்தின் 08 துப்பாக்கி
சூட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்கள் உட்பட 23 பதக்கங்களை வென்றெடுத்து
நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு மண்ணில் இலங்கை
வீரர்களின் இவ் வெற்றி சாதனைக்கு இலங்கை இராணுவ சிறிய ஆயுத சங்கம் (SLASAA)
வழங்கிய விரிவான பயிற்சியியே காரணமாகும். |