தென் ஆசிய சிவில் விவகாரங்களுக்கான 5வது
வருடாந்த கருத்தரங்கு
[2017/08/09]

2017ஆம் ஆண்டுக்கான தென்
ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்களுக்கான 5வது வருடாந்த கருத்தரங்கு,
கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலின் நேற்று (ஆகஸ்ட், 08) ஆரம்பமானது. பத்து
நாட்களைக் கொண்ட இக் கருத்தரங்கினை இலங்கை இராணுவத்தின் உளவியல் நடவடிக்கை
பிரிவு பணியகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகம் ஆகியன இணைந்து
ஏற்பாடு செய்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆசிய பிராந்தியத்தில்
சேவையாற்றும் முப்படை வீரர்களுக்கு, சிவில் உறவுகள் தொடர்பாக விரிவான
விளக்கத்தினை பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த இக்கருத்தரங்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் இலங்கை உற்பட பங்களாதேஷ், கம்போடியா,
இந்தியா, இந்தோனேசியா, மங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் மாலைதீவு
ஆகிய நாடுகளைச் சேர்ந்த படை அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும்,
இக்கருத்தரங்கில், சர்வதேச மனிதாபிமான விதிகள், மனித உரிமைகள்,
முரண்பாடுகளுக்கான தீர்வினை எட்டுதல். சிவில் - ஊடக தொடர்புகள் உள்ளிட்ட பல
தலைப்பின் கீழ் மேலும் பல அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வின் ஆரம்ப வைபவம்,
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அதிமேதகு திரு. அதுல் கெஷப் அவர்களின்
தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் உளவியல்
நடவடிக்கை பிரிவு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மங்கள விஜேசுந்தர
அவர்களும் கலந்து கொண்டார்.
தற்போது இடம்பெற்றுவரும்
இக்கருத்தரங்கு எதிர்வரும் 18ம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|