››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

[2017/08/10]

தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது.

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினத்தையொட்டி கடந்த இரு தினங்களாக (ஆகஸ்ட், 07, 08) பல நிகழ்வுகள் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டினது நினைவு தின மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகள் என்பன அனுராதபுர நகரத்திலுள்ள மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் உருவச்சிலைக்கு முன்பாகவும் மற்றும் தந்திரிமலை ரஜமகா விகாரையிலும் இடம்பெற்றன. மேலும் இத்தினத்தை முன்னிட்டு தந்திரிமலையில் வசிக்கும் ஏழை எளியோர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் விநியோகித்தல், தானம் வழங்குதல், போதி பூஜை நிகழ்வுகள் மற்றும் தம்ம போதனை நிகழ்வுகள் என்பனவும் தந்திரிமலை ரஜமகா விகாரையில் இடம்பெற்றது.

மேலும், இவ்வாண்டினது நினைவு நாள் நிகழ்வு வழமை போன்று திருமதி. லாலி கொப்பேகடுவ மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அனுராதபுரத்தில் உள்ள தந்திரிமலையிலும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி லாலி கொப்பேகடுவ, இலங்கை கவச படையணியின் கேணல் கொமடான் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் ஞாபகார்த்த தினம் அண்மையில் (ஆகஸ்ட்,06) அனுராதபுரம் சாலியபுர கஜபா படையணியின் தலைமையகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வாண்டினது நினைவு நாள் நிகழ்வில் கஜபா படையணியின் கேர்ணல் நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் மறைந்த யுத்த வீரர்களுக்கு மலர் வலையங்களும் சாத்தும் நிகழ்விலும் இணைந்து கொண்ட இராணுவ தளபதி மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் புகைப்படத்தினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் கஜபா படையணி நிலையத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் திருமதி விஜய விமலரத்ன மற்றும் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கஜபா படையணி நிலையத்தில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தலைமையிலான 100 பௌத்த பிக்குகளுக்கு தர்மம் வழங்கி வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து இரவு பூராகவும் பிரித் ஓதும் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோர் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள அரலி முகாமிற்கு இராணுவச் செயற்பாடு தொடர்பில் சென்றிருந்த வேளை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். மேலும் இவர்களுடன் சென்றிருந்த ரியர் அட்மிரல் மொஹான் ஜயமக, லெப்டினன்ட் கேர்ணல் எச். ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கேர்ணல் ஜீ. எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேர்ணல் வை. என். பலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேர்ணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் இராணுவ வீரரான டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோரும் இத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்