››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சிற்கு பங்களாதேஷ் தூதுக்குழுவினர் விஜயம்

பாதுகாப்பு அமைச்சிற்கு பங்களாதேஷ் தூதுக்குழுவினர் விஜயம்

[2017/08/15]

பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழுவினர் நேற்று (ஆகஸ்ட், 14) பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயமொன்ரை மேற்கொண்டுள்ளனர்.

மேஜர் ஜெனெரல் எஸ் எம் சபியுத்தீன் அஹ்மத் அவர்களின் தலைமையில் ,இங்கு வருகைதந்த வங்களதேஷ் இராணுவ, கடற்படை, விமானப்படை, சிவில் சேவை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 21 உறுப்பினர்களுக்கும், மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. சரத் குமார அவர்களின் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜெர் ஜெனெரல் ஆர் டீ ஏ ரணவக அவர்களினால் அமமைச்சின் நடவடிக்கைகள் மற்றும் நிறுவாக கட்டமைப்பு தொடர்பாக வங்களதேஷ் தூதுக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், முன்னாள் தூதுவர் திரு. நிஹால் ரொட்ரிகோ அவர்களால் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் தொடர்பாகவும் மற்றும் மேஜெர் ஜெனெரல் ஆர் ஏ நுகேரா அவர்களால் “ தெற்காசியாவில் பூகோள சாவல்கள்” தொடர்பாகவும் சுருக்கமாக தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்கை நினைவு கூறும் வகையில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) மற்றும் பங்களதேஷ் தூதுக்குழுவின் தலைவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

     

இந்நிகழ்வில், இத்தூதுக்குழுவில் வங்களதேசத்தை சேர்ந்த 12 இராணுவ அதிகாரிகள், 2 கடற்படை அதிகாரிகள், ஒரு விமானப்படை அதிகாரி, ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி, 4 சிரேஷ்ட சிவில் சேவை அதிகாரிகள் உட்பட இலங்கைக்கான தூதுக்குழுவினரில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்