››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை-ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை-ஜனாதிபதி

[2017/08/18]

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (17) இடம்பெற்ற அத்தனகல்லை திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை சிலர் குழப்ப முற்படுகின்றபோதும் தேசிய நல்லிணக்க கொள்கையை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நாட்டில் நிலையான சமாதானம் சாத்தியமாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரின் அன்பளிப்பில் இந்த புதிய மூன்று மாடி கட்டிடம் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத் தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை மாணவர்களிடம் கையளித்தார்.

2013ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு இது வரை நிர்மாணிக்கப்படாத நிலையில் உள்ள பாடசாலை கட்டிடம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பாடசாலை கட்டிடம் அல்லது வேறு எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் உரிய நிதி ஏற்பாடுகள் இன்றி அடிக்கல் நடப்படக் கூடாதென அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

அக் கட்டிட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மாணவர்களின் கோரிக்கையின் பேரில் புதிய தொழில்நுட்பக்கூடத்தை அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

அத்தனகல்லை திகாரிய மக்களின் சார்பாக ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.

கண்டி மல்வத்த பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமல தம்ம தேரர், களனி வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, பாடசாலை அதிபர் எம்.ஏ.எம் அஸ்மீர் ஆகியோரும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

     

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்