››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய கடற்படைத் தளபதி நியமனம்..

புதிய கடற்படைத் தளபதி நியமனம்..

[2017/08/18]

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷன, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்