››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

திடீர் சுகயீனமுற்ற மீனவருக்கு கடற்படையினர் உதவி

திடீர் சுகயீனமுற்ற மீனவருக்கு கடற்படையினர் உதவி

[2017/08/20]

தெற்கு கடற்பரப்பில் கடுமையான சுகயீனமுற்ற மீனவர் ஒருவரினை கரைக்கு கொண்டுவருவதற்கு இன்று (ஆகஸ்ட், 20) இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர். மீனவர்கள் குறித்த விடயம் தொடர்பாக பேருவைள காவல்துறையினருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கடற்படையினரின் கப்பல் ஜயசாகர மூலம் கொண்டுவரப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தமாதம் (ஆகஸ்ட்,) 14ஆம் திகதி பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலில் நீண்ட நாட்கள் தரித்திருந்து மீன்பிடிக்கும் வகையில் சஸ்மிக புத்தா எனும் படகில் சென்ற மீனவர் திடிரென இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். காலி கலங்கரையிலிருந்து 54 கடல் மைல்கள் தூரத்தில் இருந்த குறித்த மீனவர் கடற்படையினரின் கப்பல் ஜயசாகர மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்