››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி திருகோணமலை மற்றும் யாழ்பாணத்திற்கு விஜயம்

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி திருகோணமலை மற்றும் யாழ்பாணத்திற்கு விஜயம்

[2017/08/21]

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பி எம் ஹாரிஸ் அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரை கடந்த வெள்ளி(18) மற்றும் (19) சனிக் கிழமை தினங்களில் சந்தித்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு அன்மையில் இலங்கைக்கு வருகைதந்த இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி அவர்கள் பலாலி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது படையினரின் கடமைகள் மற்றும் பாங்கு என்பவற்றுடன் நல்லிணக்க செயட்பாடுகள் தொடர்பாகவும் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

யாழ் விஜயத்தின்போது இங்கு இடம்பெற்ற வைபவத்தின்போது, இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் துபிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் திருகோணமலைக்கான விஜயத்தின்போது கிழக்குப்பிராந்திய பாதுகாப்பு படை தளபதியையும் சந்தித்துள்ளார்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்