››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பிரியாவிடைபெறும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

பிரியாவிடைபெறும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/08/21]

பிரியாவிடைபெறும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 21) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன.

மேலும், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி 21வது இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள், பின்னர் ஐந்தாவது பாதுகாப்பு படைகளின் பிரதாணியாக செயற்பட்டார். 1980ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியின் முதலாவது கள பொறியியல் படைப்பிரிவில் பயிலுனர் படை அதிகாரியாக இணைந்து கொண்ட அவருக்கு 1981ம் ஆண்டு ஜுலை 18ம் திகதி இரண்டாம்நிலை லெப்டினன்ட் ஆக அதிகாரமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்