››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கடமையேற்பு

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கடமையேற்பு

[2017/07/22]

முன்னாள் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணியாக தமது கடமைகளை இன்று (ஆகஸ்ட், 22) பொறுப்பேற்றுக்கொண்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அட்மிரல் விஜேகுனரத்ன அவர்கள் மகா சங்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியாக செயற்பட்ட வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களுக்கு, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அட்மிரல் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பு படைகளின் பிரதாணியாக நியமிக்கப்பட்டார்.

ஏழாவது பாதுகாப்பு படைகளின் பிரதாணியாக கடமைகளைப் பொறுப்பேற்க முன்னர் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் திகதி முதல் இலங்கை கடற்படை தளபதியாக பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது. அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் 1980ஆம் ஆண்டு இலங்கை கடற்படை பயிலுனர் அதிகாரியாக இணைந்து கொண்டார். நாட்டில் நிலவிய யுத்தத்தின் போது அதற்கு சிறப்பாக முகம்கொடுக்கும் வகையில் கடற்படையில் விஷேட படகு படைபிரிவினை உருவாக்கிய பெருமை அடமிரல் விஜேகுனரத்ன அவர்களையே சாரும். மேலும் தாய்நாட்டுக்காக அவரினால் ஆற்றப்பட்ட சேவை, வீரம் மற்றும் துணிகரமான செயற்பாடுகளுக்காக அவருக்கு 'வீரோதார விபூஷணய', 'ரண விக்கிரம பதக்கம்', 'ரணசூர பதக்கம்', "விசிஷ்ட சேவா விபூஷணய' மற்றும் 'உத்தம சேவா பதக்கம்' உள்ளிட்ட பதக்கங்கள் பல வழங்கப்பட்டன.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்