››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா 21வது கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பு

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா 21வது கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பு

[2017/08/22]

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா டபிள்யுடபிள்யுவி, ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி மற்றும் 2 பார், யூஎஸ்பி, சிடிஎப்-என்டியு, பிஎஸ்சி, எம்.எஸ்சி (டி & எஸ்எஸ்) அவர்கள் 21வது கடற்படை தளபதியாக தமது கடமைகளை இன்று (ஆகஸ்ட்,22) பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னால் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சமூகமளித்து புதிய கடற்படை தளபதியிடம் அட்மிரல் வாளினை சம்பிரதாய பூர்வமாக கையளித்தார். அத்துடன் புதிய கடற்படை தளபதிக்கு அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் திருமதி. திருனி சின்னய்யா, பிராந்திய கட்டளைத்தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக உப வேந்தர், கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், கொடி வரிசை அதிகாரிகள், கடற்படை பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் கண்டி திரித்துவ கல்லூரி மற்றும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றார். 1982ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் கடற்படை பயிலுனர் அதிகாரியாக இணைந்து கொண்ட அவர் 1984ஆம் ஆண்டு பட்டதாரியானார். பின்னர் பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியில் புலமைப் பரிசிலினை பெற்றுக்கொண்ட அவர் 1986ஆம் ஆண்டு தமது பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தார்.

21வது கடற்படை தளபதியாக தமது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத்தளபதியாக செயலாற்றினார். அத்துடன் திருமதி. திருனி சின்னய்யா திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்