››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017’ இம்மாதம் ஆரம்பம்

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2017’ எதிர்வரும் திங்கள் ஆரம்பம்...

[2017/08/24]

2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 28, 29) இடம்பெற உள்ள இம்மாநாட்டில் 91 இற்கும் மேற்பட்ட வெளிநட்டு இராணுவ மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய சுமார் 800 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டில் “வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் பல இடம்பெறவுள்ளன. இம்மாநாட்டில் பங்குகொள்வதற்காக இந்தியாவின் 22 இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள், இலங்கையின் 10 பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டின் 42 வெளிநாட்டு இராணுவ தூதுக்குழுவினர் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர். இம் மாநாடானது, 2011ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய, பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்படும் மிக முக்கியதத்துவம் வாய்ந்த மாநாடாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுவிளங்குகின்றது.

மேலும் கடந்த (2016) வருடம் ”மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் கொழும்பில் இடம்பெற்ற இம்மாநாட்டில் சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதேநேரம் இவ்வருட பாதுகாப்பு மாநாட்டின் அமர்வுகளில் 'வன்முறை தீவிரவாதம்', 'வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தல்', 'வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தலில் படைவீரர்களின் வகிபாகம்’ மற்றும் ‘வன்முறை தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைகள்’ உள்ளிட்ட பல தலைப்புக்களில் விரிவுரைகள் பல இடம்பெறவுள்ளதுடன் மேலதிகமாக கவனம்செலுத்த வேண்டிய கிழக்கு மற்றும் தெற்காசிய தேசிய முன்னோக்குகளின் சவால்கள் மற்றும் பிரச்சினைகள், “பிராந்திய அமைப்புக்களின் பாங்கு”, “பூகோள ஆளுமையின் தாக்கம்”, “ சட்ட அமுலாக்கம்“, “புலனாய்வில் இணையவழி சவால்கள் மற்றும் உத்திகள்”, “இராணுவத்தினரின் குறித்த பணிகள் மற்றும் சிவில் இராணுவ தொடர்புகள்” , 'ஐ.நா. பொறிமுறைகள், 'உள்ளக பாதுகாப்பில் கல்வி உத்திகள்',“வன்முறைகளை எதிர்க்கும் வகையிலான இராஜதந்திர வழிமுறைகள் “, 'வன்முறை தீவிரமும் நல்லிணக்கமும்', 'உலகளாவிய ஆட்சிக்கு இராணுவத்தின் பங்களிப்பு', ' தீவிரவாதம் ' மற்றும் “வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ள நான்காம் தலைமுறையின் போர் நடவடிக்கைகள்” போன்ற பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகம்கொடுத்தல் தொடர்பாக இந்த இரண்டு நாட்கள் கொண்ட கருத்தரங்கில் கலந்துரையாடப்படவுள்ளன.

மேலதிக தகவலுக்கு

தொடர்பான செயதிகள் >>

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம் ஆரம்பம்...

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” வெற்றிகரமாக நிறைவு

“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016”

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்