››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாடசாலை மாணவர்களுக்கு விமானப்படையினரால் கல்வி புலமைப்பரிசில்கள்

பாடசாலை மாணவர்களுக்கு விமானப்படையினரால் கல்வி புலமைப்பரிசில்கள்

[2017/08/25]

தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (ஆகஸ்ட், 23) இடம்பெற்றது. இலங்கை விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விமானப்படையினால் குறித்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இக் கல்வி புலமைப்பரிசில்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடர்ச்சியாக 8வது வருடமாகவும் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி புலமைப்பரிசில்கள் திட்டத்தின் கீழ் விமானப்படை யுத்த வீரர்கள், சேவையில் உள்ள வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் ஆகியோரின் தரம் 05 தொடக்கம் க.பொ.தா. உயர் தரம் வரை கல்வி கற்கின்ற 51 மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை, 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.தா. சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட விமானப்படை வீரர்கள் மற்றும் சிவிலியன்களின் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் பல வழங்கி வைக்கப்பட்டன. இவர்களில் 11 மாணவர்கள் க.பொ.தா. சாதாரண தர பரீட்சையில் ஒன்பது "A" சித்திகளையும் 06 மாணவர்கள் க.பொ.தா. உயர் தர பரீட்சையில் மூன்று "A" சித்திகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விமானப்படைத் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி மற்றும் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்