››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை செப்டம்பரில் ஆரம்பம்

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை செப்டம்பரில் ஆரம்பம்

[2017/08/27]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - 2017' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இக்களமுனை பயிற்சியில் வெளிநாட்டு இராணுவதத்தினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 62 பேர் உட்பட இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 2675 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வு தொடர்பான தகவல்களை அண்மையில் இலங்கை இராணுவ தலைமையகத்தில் இடம்பற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இராணுவ அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் தெரிவித்தார்.

எட்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கள முனை போர் பயிற்சி நடவடிக்கையில் கொமாண்டோ, விஷேட படையணி மற்றும் பொறிமுறை காலாட்படை அணியினர் உட்பட 2108 இராணுவ வீரர்களும், 370 கடற்படைவீரர்களும், 197 விமானப்படை வீரர்களும் பங்களாதேஷ், இந்தியா, மாலை தீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவத்தினரும் இக் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த பயிற்சிக்கு கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவும்,பிரதி பணிப்பாளராக பிரிகேடியர் நிஷாந்த ஹேரத்தும், பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா, பிரிகேடியர் உதித பண்டார, கேர்ணல் சந்திரா ஜயவீர, கேர்ணல் சுஜீவ ஹெட்டியாரச்சி மற்றும் கேர்ணல் சந்தன விக்கிரமசிங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருடன் கடற்படை மற்றும் விமானப்படையினர் இணைந்த செயற்பாடுகளில் இளம் படை அதிகாரிகளின் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும் அரச சார்பற்ற அமைப்பாளர்கள், வான் மற்றும் கடல் நடவடிக்கைகள், இணைய தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பவற்றை எதிர்கொள்ளத்தக்க வகையிலும் இப்பயிற்சி நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது

இவ்வருட கள முனைப் பயிற்சியில் ரோந்து நடவடிக்கைகள், ஊடுருவல் / ஊடுருவலைத் தடுத்தல், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு, போர் கண்காணிப்பு, இணைப்புக்களை ஏற்படுத்தல், தற்காலிகமாக தரித்திருத்தல், இடிபாடுகள், சுற்றிவளைப்புக்கள் , மறைந்திருந்து தாக்குதல்கள், இடைமறித்து தாக்குதல் மற்றும் தாக்குதல்களை முறியடித்தல், மீட்பு பணிகள், நகர்ப்புற சண்டை மற்றும் அனர்த்த நிவாரணம் உள்ளிட்ட பல பொறிமுறைகளை பயிற்றுவிக்கும் நோக்கத்தினைக் கொண்டது. அத்துடன் இம்மாதிரி போர் பயிற்சி செப்டம்பர் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது..

எட்டாவது கள முனை போர் பயிற்சி நடவடிக்கை, பயிற்சி பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கமடோர் யூ. ஐ. சேரசிங்க மற்றும் குரூப் கேப்டன் வி.பி. எதிரிசிங்க உள்ளிட்ட பயிற்சி பணிப்பாளர் குழுவினால் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.

தொடர்பான செயதிகள் >>

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பமசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்