››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017

“வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017

[2017/08/28]

இலங்கை இராணுவத்தின் 7வது சர்வதேச மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட், 28) ஆரம்பமாகியது. குறித்த இம் மாநாட்டில் முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அத்தியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில் இவ்வருட மாநாடு நடைபெறுகின்றது.

பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களினால் முக்கிய உரை நிகழத்திய அதேவேளை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களினால் அறிமுக உரையும் நிகழத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமெரிக்க கடற்படை அதிகாரி எட்மிரல் வில்லியம் ஜே போல்லென் (ஓய்வு) முக்கிய உரையாற்றினார்.

இதேநேரம் இவ்வருட பாதுகாப்பு மாநாட்டின் முதல் நாள் அமர்வில் 'வன்முறை தீவிரவாதம்', 'வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தல்', 'வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தலில் படைவீரர்களின் வகிபாகம்’ ஆகிய தலைப்புகளில் 13 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சிறப்பு பேச்சாளர்களினால் தமது அறிவை பகிர்ந்து கொள்வார்கள்.

மேலும், நான்கு அமர்வுகளைக் கொண்ட இரண்டாவது மற்றும் இறுதி நாளான நாளை 14 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சிறப்பு பேச்சாளர்கள் தமது அறிவை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு பிரசாத் காரியவசம் அவர்களால் அறிக்கை உறுதிப்படுத்தும் உரையும் நிகழ்த்தப்படும்.

இம்மாநாட்டின் ஆரம்பநிகழ்வில் கௌரவ பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி செயலாளர், திரு. ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதாணி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், இராஜதந்திர உறுப்பினர்கள் உட்பட சுமார் 800க்கும் அதிகமான புகழ்பெற்ற புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இம்மாநாட்டுக்கு 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 60 நாடுகளில் இருந்து சுமார் 160 க்கும் அதிகமான புகழ்பெற்ற புத்திஜீவிகள் கலந்துகொண்டுள்ளதுடன், தேசிய, பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்படும் மிக முக்கியதத்துவம் வாய்ந்த மாநாடாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுவிளங்குகின்றது. ஆரம்பத்தில் “பாதுகாப்பு கருத்தரங்கு” எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வு 2016ஆம் ஆண்டிலிருந்து பெயர் மாற்றம் பெற்று “கொழும்பு பாதுகாப்பு மாநாடு“ எனும் தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

     
     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

தொடர்பான செயதிகள் >>

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2017’ எதிர்வரும் திங்கள் ஆரம்பம்...

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம் ஆரம்பம்...

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” வெற்றிகரமாக நிறைவு

“மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு” என்ற தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016”

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2016” க்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இராணுவம்

செப்டம்பரில் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2016”



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்