››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழு அஞ்சலி

போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழு அஞ்சலி

[2017/08/31]

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரது நினைவு துாபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழுவினர் நேற்று (ஆகஸ்ட், 30) தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். அண்மையில் நிறைவுற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017” இல் கலந்துகொள்ளும் வகையில் அவுஸ்திரேலியாவிலுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைகள், வடக்கு - துணை கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் தலைமையில் வருகைதந்த 5 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவினரே இவ்வாறு அஞ்சலிகளை செலுத்தியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தூதுக்குழுவினருடன் வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அவர்களும் மலர் வலையம் சாத்தி மரியாதை மற்றும் அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளார.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்