››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உக்ரைன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

உக்ரைன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/31]

இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரகத்தின் விமானப்படை மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஓலெஹ் ஹுலாக் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 31) சந்தித்தார்.

மேலும், பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஓலெஹ் ஹுலாக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன. அத்துடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின்போது, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் டீ ஏ ஆர் ரணவக அவர்களும் சமூகமளித்திருந்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்