››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிர்கதியான இந்திய மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி

நிர்கதியான இந்திய மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி

[2017/09/01]

வட பிராந்திய கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரின் உயிர்களை இலங்கை கடற்படை காப்பாற்றியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட், 31) அதிகாலை வேளையில் கடற்படை வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணி மூலம் குறித்த மீனவர்களின் உயிர்கள் காப்பாற்றபட்டுள்ளது. அனலைதீவுக்கு 8.5 கடல்மைல்கள் தொலைவில் இந்திய மீனவர்களின் படகு மூழ்கிக் கொண்டிருப்பதை அவதானித்த இலங்கை கடற்படையினர், பி 494 அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் மீனவர்களின் உயிர்களையும் காப்பாற்றியதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படை வீரர்களினால் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு மருத்துவ உதவிகள், உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்ட அதேவேளை, அவர்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் உதாரவிற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
மேலும், இலங்கை கடற்படை வீரர்கள், மூழ்கிய இந்திய மீனவர்களின் படகினை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். மேலும், மீட்கப்பட்ட இந்திய மீனவர்களை மீள கையளிக்கும் முயற்சியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்