››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அவுஸ்திரேலிய வெளிவிவகார செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

அவுஸ்திரேலிய வெளிவிவகார செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/09/01]

அவுஸ்திரேலிய வெளிவிவகார செயலாளர் திரு. பிரான்செஸ் அடம்சன் அவர்கள் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை நேற்று (செப்டெம்பர், 02) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் குழுவினர்களுக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அவுஸ்திரேலிய தூதுக்குழுவினரில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. ப்ரைசீ ஹட்சசன் மற்றும் பாதகாப்பு ஆலோசகர் கெப்டன் ஜாசன் செர்ஸ் உட்பட தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின்போது, மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர் எம் எஸ் சரத் குமார, தேசிய புலனாய்வு அதிகாரி. திரு சிசிர மென்டிஸ், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் டீ ஏ ஆர் ரணவக மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பிரதம பணிப்பாளர் ரியர் எட்மிரல் பியால் டீ சில்வா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்