››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடபகுதி பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் உதவி

வடபகுதி பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் உதவி

[2017/09/06]

இலங்கை இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேச மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வித் தரம் என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மகா வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையகத்தின் கீழ் இயங்கும் 591படைப்பிரிவினரால் குறித்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கிறன.

 

   

இதேவேளை, யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் கழிப்பறைகட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு இராணுவ வீரர்கள் உதவியளித்துள்ளனர். யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 523ஆவது படைப்பிரிவிற்குரிய 12ஆவது கெமுனுவோட்ச் படையணி மற்றும் 4ஆவது விஜயபாகு காலாட் படையணி ஆகியன இணைந்து குறித்த சுகாதார வசதிகள் அடங்கிய கட்டிடத்தினை அமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர். இக்கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு தேவையான ரூபா 300,000/= நிதித்தொகையானது நியூயோர்க்கில் வசிக்கும் திருமதி ஓனிலி எஸ். ரணசிங்க அவர்களினால் வழங்கப்பட்டது.

அண்மையில் (ஆகஸ்ட், 27) இக் கழிப்பறைகட்டிடத்தின் திறப்பு விழா இடம்பெற்றது. இதன்போது கழிவறைகளை சுத்தம் செய்யும் ஒரு தொகுதி பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கழிப்பறை வளாகத்தை கட்டியெழுப்பிய இராணுவ சேவையை பாராட்டி நன்கொடையாளரினால் இராணுவத்தினருக்கு டிசேட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

   

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவதுபடைப்பிரிவின் 22 ஆவது ஆண்டு நிறைவுதின நிகழ்வை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வில் 6 இராணுவ அதிகாரிகள் மற்றும் 101 இராணுவவீரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்