››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சீரற்ற காலநிலையை எதிர்கொள்ள இராணுவத்தினர் தயார் நிலையில்

சீரற்ற காலநிலையை எதிர்கொள்ள இராணுவத்தினர் தயார் நிலையில்

[2017/09/08]

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அவச சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு இலங்கை இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக நாட்டில் நிலவிய கடும் மழைவீழ்ச்சி காரணமாக கேகாலை, இரத்னபுரி, காலி, மாத்தறை, களுத்துறை, குக்குலேகங்க, புலத்சிங்கல, அகலவத்த மற்றும் குருவிட ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதன் காரணமாக மேற்கு பாதுகாப்பு படை தலைமையாக படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் ஆறு டப்லியூ எம் சட் மற்றும் படகுகள் என்பன அவச சூழ்நிலையில் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

இவ்வருடம் மே மாதம் பல உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது, முப்படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முன்னின்று செயட்பட்டிருன்தனர். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் மூலம் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கா மக்களுக்கு தமது உதவிகளை வழங்கியிருந்தனர்.

தென்மேற்கு பருவப்பெயர்சி மழை காரணமாக 15 மாவட்டங்கள் பரந்த அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. இதன்போது, இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. மேலும் வீதிகள், பாலங்கள் என்பனவற்றின் தடைகள் நீக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கிணறுகளும் சுத்திகரிக்கப்பட்டு அனர்த்தத்தின் பின்னரான சேவைகளாக செய்து கொடுக்கப்பட்டது.

இதேவேளை, நாட்டின் மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் உட்பட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிளும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிகமான (100-150மி மீ) மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அவச சூழ்நிலையின் போது தொடர்பு கொள்ளவேண்டிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கம் - 117



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்