››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஆயுதப்படைகளுக்கான பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ பரிசூட் வீரர்களின் திறமை

ஆயுதப்படைகளுக்கான பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ பரிசூட் வீரர்களின் திறமை

[2017/09/10]

 

அண்மையில் இலங்கை இராணுவ வீரர்கள் ஐக்கிய இராச்ச்சியத்தில் நடைபெற்று நிறைவுற்ற 18வாது ஆயுதப்படைகளுக்கான பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிகழ்வு கடந்த மாதம் (ஆகஸ்ட்) 14ம் திகதி முதல் 28ம் திகதி பிரிட்டிஷ் இராணுவப் பாராசூட் அமைப்பின் டிராப் வலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் அனைத்து திறந்த பிரிவு பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் சிவில் மற்றும் சர்வதேச இராணுவ குழுக்கள் கலந்துகொள்ள முடியும். குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், ஐக்கிய இராச்ச்சிய இராணுவத்தை சேர்ந்த ரெட் டெவில் உட்பட ரோயல் கடற்படை, ரோயல் விமானப்படை ஆகியவருடன் இலங்கை இராணுவ பரிசூட் குழுவினர் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கோல்டன் நைட் ஆகிய படைபிரிவுகள் உள்ளிட்ட சுமார் 300 க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ அணியினர் முதன்முதலாக வெளிநடு ஒன்றில் பரிசூட் காட்சிகள் மூலம் தமது திறமையினை வெளிக்காட்டி தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்