››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“பசுபிக் எயாலிப்ட் ரெலி 2017” மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

“பசுபிக் எயாலிப்ட் ரெலி 2017” மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

[2017/09/13]

பசுபிக் விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அண்மையில் (செப்டம்பர், 11) ஆரம்பமான பசுபிக் எயாலிப்ட் ரெலி 2017 நீர்கொழும்பு ஜெட்விங் புளு ஹோட்டலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற குறித்த பயிற்சி நிகழ்வில் பசுபிக் பிராந்திய நாடுகளின் விமானப்படையினர் பங்கு கொள்கின்றனர், பசுபிக் விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்படும் குறித்த நிகழ்விற்கு ஐக்கிய நாடுகள் பசுபிக் கட்டளையகதித்தினால் தேர்ந்தெடுக்கப்படும் விமானப்படையினர் இணைந்து கொள்வர். இதேவேளை, இலங்கை விமானப்படையினர் இரண்டாவது முறையாகவும் இணைந்து செயற்படும் நிகழ்வாக இது காணப்படுகிறது.

மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்து – ஆசியா பிராந்திய நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை நிலைநாட்டுதல் மற்றும் இராணுவ எயாலிப்ட் உள்ளியக்கத்தன்மையை மேம்படுத்தல் இதன் நோக்கமாக காணப்படுகிறது. மேலும் சர்வதேச மாநாடு, பல நாடுகளுக்கு மத்தியிலான அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மற்றும் C-130 ஹெர்குலஸ் விமானம் ஊடாக அனர்த்த நிவாரணத்தின்போது பொருட்களை கொண்டு செல்வதுடன், பரா ட்ரோப், பரா ற்ரூப், கார்கோ ட்ரோப், போன்ற பல்வேறு தந்திரோபாயங்களை செயற்படுத்துதல் இதன் நோக்கமாகும்

மேலும், இரண்டு உப பிரிவுகளைக்கொண்டு நடைபெறும் இப்பயிற்சியின் கட்டளைகள் தொடர்பான பயிற்சிகள் நீர்கொழும்பிலும் மற்றும் விமானம் செலுத்துதல் தொடர்பான பயிற்ச்சிகள் கட்டுநாயக மற்றும் அமபாரை விமானப்படை தலைமையகத்திலும் நடைபெற உள்ளதுடன், அமெரிக்கா, இந்தோனேசியா, பங்களாதேஷ், ஜப்பான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆவுஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வர்.

இந்நிகழ்வின் நேற்றைய இரண்டாவது நாள் அமர்வின்போது மருத்துவ மற்றும் சிவில் பொறியியல் துறை நிபுணதத்துவ பரிவர்த்தனை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மேலும், குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர். 16) நிறைவு பெரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்