››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நடைபெற்றுவரும் 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII ' தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமளிப்பு

நடைபெற்றுவரும் 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII ' தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமளிப்பு

[2017/09/13]

கிழக்குப் பிராந்தியத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII இன் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (செப்டம்பர், 12) இடம்பெற்ற நேரடி வீடியோ காட்சிகளின் கலந்துரையாடல் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது, குறித்த களப் பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் படையினரின் தாக்குதல்கள் மற்றும் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றம் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது அமைச்சர் மற்றம் செயலாளர் ஆகியோருக்கிடையே பயிற்சி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களின் நலன்புரி தொடர்பாகவும் இராணுவத் தலபதியிடம் வினவப்பட்டது. அத்துடன் பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தமது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்ய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடர்பான செயதிகள் >>

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை ஆரம்பம்

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை செப்டம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி – VII” சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது

நீர்க்காக தாக்குதல் பயிற்சி - VII வெற்றிகரமாக நிறைவு

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி ஆரம்பம்

‘நீர்க்காக தாக்குதல் - VII’ பயிற்சி செப்டெம்பரில் ஆரம்பமசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்