'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII” நிறைவுக்கட்டத்தில்
'நீர்க்காக கூட்டு
பயிற்சி” யில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஜனாதிபதி நல் வாழ்த்து
[2017/09/14]

இன்று காலை (செப்டம்பர், 14) திருகோணமலை குச்சவெளி
பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த போர் களமுறைப் பயிற்சியான 'நீர்க்காக
கூட்டு பயிற்சி” யின் இறுதிக்கட்டத்தினை பார்வையிடும் வகையில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
குறித்த இப்பபயிற்சியைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.
குறித்த நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்கள், வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றும் போது, பயிற்சியில் ஈடுபட்டுள்ள
படையினருக்கு தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்தார். படையினரின் ஒழுக்கம்
அர்ப்பணிப்பு, தைரியம், வீரம், மற்றும் திறமை என்பவற்றை பாராட்டும் போதே
அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நாட்டினுடைய பாதுகாப்பு படைகள் பரந்த
அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், படையினருக்கு இவ்வாறான
இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும்
சுட்டிக்காட்டினார். அத்துடன் இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த
வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது நன்றி
தெரிவித்தார்.
இக்களமுனை தாக்குதல் பயிற்சியின்போது, எதிரிகளின்
மறைவிடங்கள் மீது பல-முனைகளில் இருந்து கடல் மற்றும் தரைவழி ஊடான கூட்டுத்
தாக்குதல் நடத்தப்பட்டதுடன், விஷேட படைகளின் திட்டமிடல், தயார்படுத்தல்,
தொடர்பான திறன்களை மேம்படுத்தும் வகையிலும் இப்பயிற்சி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு
வந்த குறித்த பயிற்சி நடவடிக்கைகளின் போது, இலங்கை கடற்படையின் அதிவேக
தாக்குதல் படகு, கரையோர ரோந்துப் படகு, அதிவிரைவு துப்பாக்கிப் படகு மற்றும்
இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ என் 32 ரக விமானங்களும்
ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல்
ரவீந்திர விஜயகுணரட்ன,இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க,
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா , விமானப்படை தளபதி எயார்
மாஷல் கபில ஜயம்பதி, இராஜதந்திர உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், மற்றும்
சிரேஷ்ட காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை இராணுவம் 8வது வருடமாக இம்முறையும் களமுறைப்
பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்–VII’ நிகழ்வினை ஏற்பாடு செய்ததுடன்,
இவ்வருட போர் களமுறைப் பயிற்சியில் 13 நாடுகளைச் சேர்ந்த 69 வெளிநாட்டு
படைவீரர்கள் மற்றும் 2675 முப்படை இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி
மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட
குறித்த பயிற்சி நடவடிக்கைகள் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தை
மையமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செயதிகள் >>
|