››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'ரன ரங்க கீ மியசிய 2017' நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

'ரன ரங்க கீ மியசிய 2017' நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/09/15]

கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று (செப்டெம்பர்,14) இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவ மாணவிகளின் 'ரன ரங்க கீ மியசிய 2017' இசை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்த்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வு நடைபெறும் இடத்திடிற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை கல்லூரியின் அதிபர், ஆசிரியர், மாணவ மாணவிகள் இணைத்து வரவேற்றனர்.

இவ்வருடாந்த இசை நிகழ்வு பாதுகாப்பு கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் அழகியல் திறமைகள் வெளிக்கொணரும் வகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை பாடசாலை மாணவ மாணவிகளின் வண்ணமயமான இசை மற்றும் நடன நிகழ்வுகள் அலங்கரித்தன.

இந்நிகழ்வின் போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், மாணவர்களை திறமைகளை பாராட்டியதுடன் இவ்வகையான நிகழ்வுகள் நாட்டிற்காக பல்வேறுவகையிலும் தமது பங்களிப்பினை பாதுகாப்புப்படை வீரர்களின் மாணவர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்வதற்கு வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இக் கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்துவதற்காக அயராது பாடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சேவைகளையும் பாராட்டினார்.

இதன்போது பாடசாலை அதிபரினால் இராஜாங்க அமைச்சரின் சேவைகளைப் பாராட்டி அவருக்கு நினைவுச்சின்னமொன்ரும் பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெருந்தொகையான பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்