››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை வான் போக்குவரத்து பிரிவு ஐ. நா. அமைதி காக்கும் பணிக்காக பதக்கங்களை பெறுகிறது

இலங்கை வான் போக்குவரத்து பிரிவு ஐ. நா. அமைதி காக்கும் பணிக்காக பதக்கங்களை பெறுகிறது

[2017/09/15]

மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் இலங்கை விமானப்படையின் வான் போக்குவரத்து பிரிவுக்கு கடந்த புதன் கிழமையன்று இடம்பெற்ற வைபவத்தின் போது ஐ.நா. அமைதிகாப்பு பணிகளுக்கான பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்காக சென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த மூன்றாவது தொகுதியில் உள்ளடங்கிய ஆறு விமானப்படை அதிகாரிகளுக்கு இவ்வைபவத்தின் போது பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிகழ்வில் கிழக்கு பிராந்தியத்தின் கட்டளைத்தளபதியாக கடைமையாற்றும் பிரிக்கேடியர் ஜெனரல் முஹமட் அப்தெல்பஸ்செட் முஹமட் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அதேவேளை இலங்கை விமானப்படையின் வான் தாக்குதல் நடவடிக்கைகளின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்கள் இலங்கை விமானப்படையின் சிறப்பு பிரதிநிதியாக கலந்துகொண்டார். அத்துடன் இந்நிகழ்வில் மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது வரலாற்று சிறப்பு மிக்க சிகிரிய குன்று பின்னணியில் வர இலங்கையின் பாரம்பரிய நடன மற்றும் வாத்திய கருவிகளின் இன்னிசையுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்