››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முதலை தாக்குதலுக்குள்ளான வெளிநாட்டு பிரஜையின் சடலம் கடற்படையினரால் மீட்பு

முதலை தாக்குதலுக்குள்ளான வெளிநாட்டு பிரஜையின் சடலம் கடற்படையினரால் மீட்பு

[2017/09/16]

முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரின் சடலத்தினை மீட்க இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிசாரினால் இலங்கை கடற்படையின் தென்கிழக்கு கடற்படைத் தலைமையாகத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படை வீரர்களினால் இச்சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் 24 வயதுடைய போல் மக்களீன் எனும் பிரித்தானிய பிரஜையாவார். இவர் அறுகம்பை, யானை குன்றில் ஹெடஓயா ஆற்றில் இறங்கிச்சென்ற சமயத்தில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையின் அதிவிரைவு மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் உயிரிழந்த பிரித்தானிய பிரஜையின் வெள்ளிக்கிழமை காலை சடலத்தை கண்டுபிடித்தனர். சடலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பானம பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்