››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்புச் செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பாதுகாப்புச் செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

[2017/09/18]

இலங்கை இராணுவத்தின் முன்னாள் சேவையாளர்கள் சங்க பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர். 18) சந்தித்துள்ளனர். இதன்போது இடம்பெற்ற நிகழ்வில், இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ரியர் எட்மிரல் ( ஒய்வு ) எஸ் ஆர் சமரசிங்க அவர்களினால் பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

பொப்பி மலர் தினம் என அறியப்படும் படைவீரர்களின் ஞாபகார்த்த தின நிகழ்வானது, பொதுநலவாயத்தின் அங்கத்துவ நாடுகளில் முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்றதிளிருந்து அதில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட இத் தினம் 1921ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி முதன் முதலில் பிரித்தானியாவில் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்