››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் அனலைதீவு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை

கடற்படையினரால் அனலைதீவு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை

[2017/09/27]

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட அனலைதீவில் உள்ள அய்யனார் முன்பள்ளியில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (செப்டம்பர், 24) நடாத்தியுள்ளனர்.

கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்சமூக சேவையினூடாக இத்தீவில் வசிக்கும் புதிதாக மீள்குடியமர்த்தப்பட்ட 538 குடும்பங்களை சேர்ந்த 337 நோயாளிகள் தமது நோய்களுக்கான சிகிச்சையினை பெற்றுக்கொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், சிறுவர் சுகாதார பிரச்சினைகள், வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான / நீண்டகால உடல்நல நோய்கள், அத்துடன் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன அவதானிக்கப்பட்ட பின்னர் .ஆரம்ப கட்ட சுகாதார சிகிச்சைகள் வழங்கப்பட்டன

நோயாளிகளுக்கு அனைத்து ஆய்வக பரிசோதனைகள் மற்றும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கடற்படையின் குறித்த சமூக சேவைக்காக அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் திரிபோசா லங்கா லிமிட்டெட் ஆகியன மருந்துவகைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கின.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்