››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தலதா மாளிகையில் விமானப்படையினரின் மருத்துவ முகாம்

தலதா மாளிகையில் விமானப்படையினரின் மருத்துவ முகாம்

[2017/09/28]

இலங்கை விமானப்படையினரால் தலதா மாளிகை மகா சங்க நாயக்க உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ முகாம் ஒன்று நேற்றய தினம் (செப்டெம்பர், 27 ) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த மருத்துவ முகாமினை இலங்கை விமானப்படையின் சுகாதார சேவை பணியகம் மற்றும் பல் மருத்துவ சேவைகள் பணியகம் ஆகின இணைந்து முன்னெடுத்ததாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. தலதா மாளிகையில் இலங்கை விமானப்படையினரால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இம்மருத்துவ முக்காமில் 500ற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தியவதன நிலமே உள்ளிட்ட தலதா மாளிகையின் முக்கியஸ்தர்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்